விமலின் புது ரூட்...!

விமலின் புது ரூட்...!

செய்திகள் 14-May-2013 11:55 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

தமிழ் சினிமா ஆரோக்கியமாக இருக்கின்ற சூழலோ என்னவோ? நடிகர்கள், இயக்குனர்கள் என பலரும் தயாரிப்பாளர்களாகவும் களமிறங்கிக் கொண்டிருக்கின்றனர்... நடிகர்கள் தனுஷ், சிபிராஜ், ஆர்யா, விஷால் விஜய் சேதுபதி மற்றும் இயக்குனர் பாண்டிராஜ் ஆகியோர் அதற்கு சிறந்த உதாரணம். அந்தவகையில் தற்போது புதிதாக தயாரிப்பாளர் லிஸ்ட்டில் இணைந்திருக்கிறார், நடிகர் விமல். இவர், சண்டைப் பயிற்சியாளர் திலீப் சுப்பராயனுடன் இணைந்து திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் துவக்கவிருக்கிறாராம்! தற்போது 'மஞ்சப் பை', 'பெங்களூர் தமிழன்', 'ஜன்னல் ஓரம்' ஆகிய படங்களில் நடித்துவரும் விமல், இந்தப்படங்களின் படப்பிடிப்பு முடிந்தவுடன், மீண்டும் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவிருக்கிறார். இந்த மூன்று படங்களையும் முடித்துக்கொடுத்துவிட்டு தனது தயாரிப்பில் உருவாகவிருக்கும் முதல் படத்திற்கான வேலைகளை ஆரம்பிக்கவிருக்கிறாராம். தவிர, இனி 'மாடர்ன்' கேரக்டர்களில் நடிப்பதில்லை... என்ற முடிவினையும் எடுத்திருக்கிறார் விமல்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பஞ்சுமிட்டாய் - டிரைலர்


;