கோச்சடையானை பார்க்க கமலை அழைத்த ரஜினி!

கோச்சடையானை பார்க்க கமலை அழைத்த ரஜினி!

செய்திகள் 14-May-2013 11:46 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

சௌந்தர்யா ஆர்.அஸ்வின் இயக்கத்தில், ரஜினிகாந்த் இரண்டு வேடங்களில் நடித்திருக்கும் ‘கோச்சடையான்’ படத்தின் வேலைகளெல்லாம் முடிந்து படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. ரஜினிகாந்துடன் சரத்குமார், ஆதி, ஜாக்கி ஷெராஃப், நாசர், தீபிகா படுகோனே, ஷோபனா, ருக்மிணி விஜயகுமார் போன்ற பெரிய நட்சத்திர பட்டாளமும், இயக்குனர் கே.எஸ்,ரவிக்குமார், ஆர்.மாதேஷ், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன், படத்தொகுப்பாளர் ஆண்டனி என பெரிய தொழில்நுட்ப கலைஞர்களும் இணைந்து உருவாக்கியிருக்கும் இப்படம் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தை பார்க்க தனது நீண்டகால நண்பரான கமல்ஹாசனை அழைத்திருக்கிறார் ரஜினிகாந்த். படம் வெளியாவதற்கு முன்னாடி உலக சினிமா விஷயங்கள் நன்கு அறிந்து வைத்திருப்பவரான கமல்ஹாசனுக்கு படத்தை போட்டு காட்டுவது நன்றாக இருக்கும் என நினைக்கிறார் ரஜினிகாந்த்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வேலையில்லா பட்டதாரி 2 - டிரைலர்


;