எல்ரெட் குமாருடன் இணையும் 'கொலவெறி' இசையமைப்பாளர்!

எல்ரெட் குமாருடன் இணையும் 'கொலவெறி' இசையமைப்பாளர்!

செய்திகள் 14-May-2013 11:12 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘விண்ணை தாண்டி வருவாயா’, ‘முப்பொழுதும் உன் கற்பனைகள்’, ‘நீதானே என் பொன் வசந்தம்’ என தனித்துவமிக்க படங்களை தயாரித்த எல்ரெட் குமார், ஜெயராமன் ஆகியோர் தங்களது ஆர்.எஸ்.இன்ஃபோடெய்ன்மென்ட் நிறுவனம் சார்பாக தற்போது தயாரித்து வரும் படம் ‘யான்’. இந்த படத்தைத் தொடர்ந்து எல்ரெட் குமார், காதல் கலந்த நகைச்சுவை படம் ஒன்றை தயாரித்து இயக்க இருக்கிறார். இந்தப் படத்திற்காக ‘கொலவெறி’ புகழ் இசை அமைப்பாளர் அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். இன்னும் பெயர் சூட்டப்படாத இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது. எல்ரெட் குமார் ஏற்கெனவே ‘முப்பொழுதும் கற்பனைகள்’ என்ற படத்தை இயக்கி வெற்றிப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - சொடக்கு பாடல் டீசர்


;