இளைஞர்களை ரிலாக்ஸ் ஆக்கும் தம் டீ!

இளைஞர்களை ரிலாக்ஸ் ஆக்கும் தம் டீ!

செய்திகள் 13-May-2013 3:03 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘தம் டீ’ என்ற பெயரில் ஒரு படம் தயாராகி வருகிறது. பாப் இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டு வரும் இப்படத்தினை சிங்கப்பூர் இளைஞர்கள் சிலர் ஒன்றுபட்டு தயாரிக்கிறார்கள். இந்த இளைஞர்களால் சில ஆண்டுகளுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட பாப் இசைக் குழு ‘மமி பாய்ஸ்’. இந்தக் குழு மேடை இசை நிகழ்ச்சிகள், குறும் படத் தயாரிப்பு என இயங்கி வந்த நிலையில் இப்போது படத் தயாரிப்பிலும் இறங்கி தயாரிக்கும் படம்தான் ‘தம் டீ’. தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து வரும் இப்படத்தில் ஏழு பாடல்கள் இடம் பெறுகிறது. படத்தின் முன்னோட்டமாக இந்தப் பாடல்களை ஆல்பமாக வெளியிட்டிருப்பதோடு படத்தின் ட்ரைய்லரையும் வெளியிட்டுள்ளனர். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி படத்தை இயக்குவதோடு ஒரு பாத்திரத்திலும் நடித்து வரும் க்ரிஷேனோ படம் குறித்து இப்படி கூறுகிறார். ‘’இளைஞர்கள் டென்ஷன் ஆகும்போதோ, மனசோர்வில் இருக்கும்போதோ டீ குடிப்பார்கள் அல்லது தம் அடிப்பார்கள். அப்படி தம் அடித்து, டீ குடித்து கிடைக்கும் ரிலாக்ஸ் மாதிரி இந்தப் படத்தை பார்க்கும் இளைஞர்களுக்கு ஒரு ரிலாக்ஸ் கிடைக்கும். அத்துடன் நல்ல ஒரு மெஸேஜும் கிடைக்கும்’’ என்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;