குலுமணாலியில் தல!

குலுமணாலியில் தல!

செய்திகள் 13-May-2013 2:07 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் அஜித், ஆர்யா, நயன்தாரா, டாப்சி முதலானோர் முக்கிய பாத்திரங்களில் நடித்து வரும் பெயர் வைக்காத படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு குலுமணாலியில் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அஜித் நடிக்கும் 53-வது படம் இது. குலுமணாலியில் நடந்து வரும் இதன் படப்பிடிப்பில் 15-ஆம் தேதி முதல் கலந்து கொள்கிறார் அஜித். பிரபல தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் நீண்ட நாட்களுக்குப் பிறகு பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்க, ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார். ‘பில்லா’ படத்திற்குப் பிறகு அஜித், விஷ்ணுவர்த்தன் இணையும் இப்படம் சைபர் க்ரைம் த்ரில்லராக உருவாகி வருகிறது. விஷ்ணுவர்த்தன், அஜித், ஆர்யா, நயன்தாரா, டாப்சி, யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் உருவாகி வரும் இப்படம் கோலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிம்பா - டீசர்


;