ராம்கோபால் வர்மாவின் ‘நான்தான்டா’

ராம்கோபால் வர்மாவின் ‘நான்தான்டா’

செய்திகள் 13-May-2013 12:00 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

இயக்குனர் ராம்கோபால் வர்மா இயக்கத்தில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் தமிழ் படம் “நான்தான்டா’. சர்வானந்த், அனைகா, அஞ்சனா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கும் இப்படத்தின் ட்ரைய்லர் சென்னையில் வெளியிடப்பட்டது. அப்போது, ‘நான்தான்டா’ என்ற படத் தலைப்புக்கான காரணம் குறித்து இயக்குனர் கூறும்போது, ”இன்றைய காலகட்டத்தில் சட்டம் ஒழுங்கை சீர்படுத்துவோரின் கடுமையான முயற்சிகளைய்ம் தாண்டி நாட்டில் குற்றங்கள் பெருகி வருகின்றன. இதற்கு காரணம், சமூகத்தில் ஏற்படும் பொருளாதார ஏற்ற தாழ்வுகள்தான். இன்றைய சமூகத்தின் பிரதிநிதியாக வரும் படத்தின் கதாநாயகன் சர்வானந்த் ஒரு கட்டத்தில் நான்தான்டா என்று தன்னை முன்னிலைப்படுத்தி, பிரகடனப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதனால் படத்திற்கு ‘நான்தான்டா’ என்று தலைப்பு வைத்தோம்” என்றார். இவர் இயக்கத்தில் பல ஆண்டுகளுக்கு முன் வெளிவந்து சூப்பர் ஹிட்டாக ஓடிய ‘உதயம்’ படத்தை அவ்வளவு எளிதில் யாராலும் மறக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

365 டேஸ் - தெலுங்குப் பட டீஸர்


;