அப்துல்கலாமுக்கு படத்தை சமர்பிக்கும் அர்ஜுன்!

அப்துல்கலாமுக்கு படத்தை சம்ர்பிக்கும் அர்ஜுன்!

செய்திகள் 13-May-2013 11:39 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘சேவகன்’, ‘பிரதாப்’, ‘ஜெய்ஹிந்த்’, ‘தாயின்மணிக் கொடி’ என பல படங்களை இயக்கிய நடிகர் அர்ஜுன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒரு படத்தை இயக்க இருக்கிறார். அர்ஜுன் ஏற்கெனவே இயக்கிய ‘ஜெய்ஹிந்த்’ படத்தின் இரண்டாம் பாகமாக ‘ஜெய்ஹிந்த் 2’ என்ற பெயரில் இயக்குகிறார். இப்படத்தில் சுர்வின் என்பவர் கதாநாயகியாக நடிக்க, இவர்களுடன் இன்னும் நான்கு பேர் ஹீரோயின்களாக அறிமுகமாக இருக்கிறார்கள். இந்தப் படம் குறித்து அர்ஜுன் கூறும்போது, ‘‘இன்றைய கல்வி முறைகளையும், அதன் குறைபாடுகளையும் சொல்லும் இப்படத்தில், இந்திய வல்லரசு நாடாக வேண்டும், எல்லோரும் கல்வி கற்க வேண்டும் என்ற முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் கனவையும் படம் பிரதிபலிக்கும். தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் எடுக்கப்படும் இப்படத்தின் வசனங்களை கோபிகிருஷ்ணா எழுத, வேணு ஒளிப்பதிவு செய்கிறார். நான் நடித்து இயக்கிய படங்களில் சமூகத்துக்கு தேவையான நல்ல கருத்துக்களை சொல்லியிருப்பேன். அது மாதிரியான கருத்துக்கள் இந்த படத்திலும் இருக்கும். இந்த படத்தை அப்துல்கலாம் மற்றும் அனைத்து மீடியாக்களுக்கும் சமர்பிக்க உள்ளேன்” என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எச்சரிக்கை - டிரைலர்


;