'ஹிட்' ஹீரோயின்...!

'ஹிட்' ஹீரோயின்...!

செய்திகள் 11-May-2013 12:12 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

சிறுபட்ஜெட் தயாரிப்பாளர்களின் கவனம் தற்போது இளம் நடிகர்களிடம் மட்டுமல்ல, இளம் நடிகைகள் பக்கமும் திரும்பிக்கொண்டிருக்கிறது... அதற்கு சிறந்த உதாரணம் லக்ஷ்மி மேனன். தமிழ்சினிமாவில் நற்பெயரை சம்பாதித்துக் கொண்டிருக்கும் நாயகி! சசிகுமார் நடித்த 'சுந்தரபாண்டியன்', விக்ரம் பிரபு நடித்த 'கும்கி' படங்கள் இவருக்கு வெற்றியைக் கொடுக்கவே, மீண்டும் சசிகுமாருன் 'குட்டிப்புலி' படத்திலும், விக்ரம் பிரபுவுடன் பெயரிடப்படாத புதிய படத்திலும் ஒப்பந்தமானார். இதில், 'குட்டிப்புலி' படம் ரிலீஸுக்குத் தயார் நிலையில் இருக்கிறது. இதனால், சிறுபட்ஜெட் தயாரிப்பாளர்கள் அனைவரும் தங்களது படத்தில் லக்ஷ்மி மேனனையே நாயகியாக்க போட்டி போட்டுக்கொண்டிருக்கிறார்கள். லக்ஷ்மி மேனன் தற்போது, இயக்குனர் சற்குணம் தயாரிப்பில் விமலுடன் 'மஞ்சப்பை' படத்திலும், சுசீந்திரன் இயக்கத்தில், விஷால் ஜோடியாக 'பாண்டிய நாடு' படத்திலும், 'சிலம்பாட்டம்' சரவணன் இயக்கத்தில், கௌதம் கார்த்திக் நாயகனாக நடிக்கும் 'சிப்பாய்' படத்திலும் நடித்துக்கொண்டிருக்கிறார். இதுதவிர, விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கவிருக்கும் 'வசந்த குமரன்' படத்திலும் நாயகி லக்ஷ்மி மேனன்தான். அனேகமாக 2013ல் அதிக படங்களில் நடித்த நாயகிகள் பட்டியலில் லக்ஷ்மிக்கு முதலிடம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

றெக்க - டிரைலர்


;