‘நேரம்’ நல்லாயிருக்காம்!

‘நேரம்’ நல்லாயிருக்காம்!

செய்திகள் 11-May-2013 11:26 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

புதுமுக இயக்குனர் அல்ஃபோன்ஸ் புத்ரன் இயக்கியிருக்கும் படம் ‘நேரம்’. சென்னை பின்னணியில் அழகாக சொல்லப்பட்டிருக்கும் காதல் கதையை கொண்ட இப்படம் ஒரே நேரத்தில் தமிழ், மலையாளம் என இரண்டு மொழியில் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் நிவின் பௌலி, நஸ்ரியா நசீம் ஜோடியாக நடித்திருக்க, ராஜேஷ் முருகேசன் இசை அமைத்திருக்கிறார். இப்படத்தின் ஆடியோ சமீபத்தில் வெளியாகி பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில் படமும் நன்றாக வந்திருப்பதாக கோலிவுட்டில் பேசப்பட்டு வருகிறது. இந்த படத்தை முதல் ப்ரிவ்யூவில் பார்த்த உதயநிதி ஸ்டாலினுக்கு படம் பிடித்துபோக, உடனே தனது ‘ரெட் ஜெயன்ட் மூவீஸ்’ நிறுவனம் சார்பாக படத்தை தமிழில் வெளியிடும் உரிமையை பெற்றதோடு படத்தை மீண்டும் மூன்று முறை பார்த்திருக்கிறார். இந்நிலையில், நேற்று (மே 10) கேரளாவில் வெளியான மலையாள ‘நேரம்’ படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாம். இதனால் வரும் மே 17ஆம் தேதி தமிழில் ரிலீஸாகவிருக்கும் இப்படத்தின் தமிழ் பதிப்புக்கும் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளதாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும் - டிரைலர்


;