ரெட் ஜெயன்ட் மூவிஸின் ராசி!

ரெட் ஜெயன்ட் மூவிஸின் ராசி!

செய்திகள் 11-May-2013 11:18 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘குருவி’, ‘ஆதவன்’, ‘மன்மதன் அம்பு’ என சொந்தமாகத் தயாரித்து வெளியிட்ட படங்களைவிட, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’, ‘கோ’, ‘மைனா’, ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ என வாங்கி வெளியிட்ட படங்களில்தான் அதிக ‘கல்லா’ கட்டியது உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம். நிவின், நஸ்ரியா நசீம் நடிப்பில் அல்ஃபோன்ஸ் புத்ரன் இயக்கியுள்ள ‘நேரம்’ படத்தை வாங்கியுள்ள இந்நிறுவனம் வரும் மே 17ஆம் தேதி இப்படத்தை வெளியிடவிருக்கிறது. தற்போது சசிகுமார், லக்ஷ்மி மேனன் நடிப்பில் முத்தையா இயக்கியுள்ள ‘குட்டிப்புலி’ படத்தின் வெளியீட்டு உரிமையையும் ‘ரெட் ஜெயன்ட் மூவிஸே’ வாங்கியுள்ளது. படப்பிடிப்பு முடிவடைந்து, பாடல்கள் வெளியீட்டுத் தயாராக உள்ள இப்படத்தை ‘வில்லேஜ் தியேட்டர் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு இசை ஜிப்ரான், ஒளிப்பதிவு மகேஷ் முத்துசாமி.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சரவணன் இருக்க பயமேன் - எம்புட்டு இருக்குது ஆசை வீடியோ சாங்


;