விக்ரம் பிரபுவின் ட்ரிபிள் ஷாட்

விக்ரம் பிரபுவின் ட்ரிபிள் ஷாட்

செய்திகள் 10-May-2013 6:03 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸுடன் கோ டைரக்டராக பணியாற்றிய ஆனந்த், ‘கலைப்புலி’ எஸ்.தாணு தயாரிப்பில் ஒரு படத்தை இயக்க இருக்கிறார். இப்படத்தில் விக்ரம் பிரபு, கதாநாயகனாக நடிக்க, ப்ரியா ஆனந்த் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் நடிக்க இருக்கும் மற்ற நடிகர், நடிகைகள், படத்தின் பெயர்  மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் விவரங்களை விரைவில் வெளியிட இருக்கிறார்கள். ‘கும்கி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து  ‘திருப்பதி பிரதர்ஸ்’ நிறுவனம் தயாரிப்பில், ‘எங்கேயும் எப்போதும்’ படத்தை இயக்கிய சரவணன் இயக்கும் ‘இவன் வேற மாதிரி’ மற்றும்  ‘யுடிவி’ நிறுவனம் தயாரிப்பில் ‘தூங்கா நகரம்’ கௌரவ் இயக்கும் ‘சிகரம் தொடு’ என மூன்று படங்களில் நடிக்க ஒப்பந்த மாகியிருக்கும் விக்ரம் பிரபு இளைய தலைமுறை நடிகர்களில் முக்கிய இடத்தை நோக்கி நகர்கிறார். 

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நெருப்புடா - ஆலங்கிலியே பாடல் வீடியோ


;