பாய்ச்சலுக்கு தயாரான ‘சிங்கம் 2’

பாய்ச்சலுக்கு தயாரான ‘சிங்கம் 2’

செய்திகள் 10-May-2013 1:08 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

சூர்யாவின் சூப்பர் நடிப்பில், ஹரியின் அதிரடியான இயக்கத்தில் வெளிவந்து சக்கை போடு போட்ட 'சிங்கம்' படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியிருக்கும் 'சிங்கம் 2' படம் மீது ரசிகர்கள் மட்டுமல்லாமல், மொத்த திரையுலகினருமே பெரும் எதிர்பார்ப்பை வைத்திருக்கிறார்கள். இந்த படத்தில் ஹரியின் இயக்கத்தில், சூர்யாவுடன் அனுஷ்கா, ஹன்சிகா மோத்வானி, சந்தானம், விவேக் என பலர் கை கோர்த்திருக்க, ப்ரியன் ஒளிப்பதிவு செய்ய, தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைத்திருக்கிறார்.

‘பிரின்ஸ் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படம் எப்போது ரிலீஸாகும் என்று ஆவலுடன் காத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு இதோ ஒரு ஸ்வீட்டான செய்தி! பிரம்மாண்டமான முறையில், அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுடன் தயாராகியிருக்கும் ‘சிங்கம் 2’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா ஜூன் 1-ஆம் தேதி சிறந்த முறையில் நடைபெறவிருக்க, படத்தை ஜூன் 14-ஆம் தேதி வெளியிட இருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மிஸ்டர் சந்திரமௌலி - ட்ரைலர்


;