போலீஸ் பாதுகாப்புடன் நடந்த விக்ரமன் படப்பிடிப்பு!

போலீஸ் பாதுகாப்புடன் நடந்த விக்ரமன் படப்பிடிப்பு!

செய்திகள் 10-May-2013 12:12 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

பல வருடங்களுக்குப் பிறகு காஷ்மீரில் படமான தமிழ் படம் ‘நினைத்தது யாரோ’. பல வெற்றிப் படங்களை இயக்கிய விக்ரமன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் ரஜித், நிமிஷா நாயகன் - நாயகியாக நடிக்கிறார்கள். காஷ்மீரில் படப்பிடிப்பு நடத்தியது குறித்து இயக்குனர் விக்ரமன் குறிப்பிடும்போது, ‘‘ரஜித், நிமிஷா பங்கேற்ற ‘கொஞ்சம் புன்னகை கொஞ்சம் காதல்...’ மற்றும் ‘மனசே லேசா ரிங்கா ரிங்கா ரோசா...’ ஆகிய பாடல்களை காஷ்மீரில் உள்ள பெல்காம் என்ற இடத்தில் ராபர்ட் நடன அமைப்பில் படமாக்கப்பட்டது.

தமிழ் நாட்டிலிருந்து படப்பிடிப்புக்கு வந்திருக்கிறார்கள் என்றவுடன் காஷ்மீர் போலீஸ் படையுடன் வந்து படக்குழுவினருக்கு பாதுகாப்பு கொடுத்தார்கள். எனக்குத் தெரிந்து ரஜினிகாந்த் நடித்த ‘வேலைக்காரன்’ படத்திற்கு பிறகு இந்த படத்தின் படப்பிடிப்புதான் காஷ்மீரில் நடந்திருப்பதாக நினைக்கிறேன். முழுக்க முழுக்க புதியவர்களை வைத்து இயக்கி வரும் இப்படம் புதிய தலைமுறையினரை கவரும் விதமாக உருவாக்கி வருகிறேன்’’ என்றார். இந்த படத்தை ‘அபிஷேக் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் சார்பாக பி.ரமேஷ், இமானுவேல் ஆகியோர் இணைந்து தயாரித்து வருகிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நினைத்தது யாரோ


;