‘நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்’

‘நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்’

செய்திகள் 10-May-2013 11:50 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தைத் தொடர்ந்து 'லியோவிஷன்' நிறுவனம் சார்பில் வி.எஸ்.ராஜ்குமார் தயாரித்து வரும் படம் ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’. கோகுல் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வர, அடுத்து புதுமுக இயக்குனர் என்.ஜே.ஸ்ரீகிருஷ்ணா இயக்கத்தில் ‘நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்’ என்ற பெயரில் ஒரு படத்தை தயாரிக்கிறது லியோவிஷன் நிறுவனம். காமெடியுடன், மக்களுக்கு நல்ல ஒரு கருத்தைக் கூறும் படமாக உருவாகவிருக்கும் இப்படத்தின் நடிகர் - நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;