‘அட்டகத்தி’ தினேஷின் அடுத்த படம்!

‘அட்டகத்தி’ தினேஷின் அடுத்த படம்!

செய்திகள் 10-May-2013 11:28 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் 'நினைத்தது யாரோ’ என்ற படத்தைத் தயாரித்துக் கொண்டிருக்கும் ‘அபிஷேக் ஃபிலிம்ஸ்’ பட நிறுவன தயாரிப்பாளர்கள் பி.ரமேஷ், இமானுவேல் இருவரும் இணைந்து ‘வாராயோ வெண்ணிலாவே’ என்ற படத்தைத் தயாரிக்கிறார்கள். இதில் ‘அட்டகத்தி’ படப் புகழ் தினேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக ஹரிப்ரியா, காவ்யா ஷெட்டி நடிக்கிறார்கள்.இந்த படத்தின் கதை எழுதி இயக்கும் ஆர்.சசிதரன் படம் குறித்து பேசும்போது, ‘‘பணக்கார இளைஞனாக வரும் தினேஷ் வேலை செய்ய கேரளா செல்கிறார். சென்ற இடத்தில் அழகான பெண்ணைச் சந்தித்து காதல் வயப்படுகிறார். அதன் பிறகு ஏற்படும் திருப்பங்கள்தான் கதை. படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு கேரளாவிலேயே நடக்கிறது. இந்தப் படத்திற்கு கார்த்திக் ராஜா இசை அமைக்க, ராணா ஒளிப்பதிவு செய்கிறார்’’ என்றார். இயக்குனர் சசிதரன், வெங்கட் பிரபு இயக்கிய ‘சென்னை 28’ படத்தின் திரைக்கதை எழுதி, வசன உதவியாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்லின் டிரைலர்


;