'தொட்டால் தொடரும்...!'

'தொட்டால் தொடரும்...!'

செய்திகள் 9-May-2013 2:53 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

சினிமா விமர்சகரும், பிரபல வலைப்பதிவாளருமான 'கேபிள்' சங்கர், இயக்குனராக அறிமுகமாகவிருக்கிறார்... 'வீரசேகரன்', 'கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை', 'பார்க்கணும் போல இருக்கு' படங்களைத் தயாரித்த துவார்.சந்திரசேகரன் தயாரிக்கவிருக்கும் இப்படத்திற்கு 'தொட்டால் தொடரும்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. விஜய் ஆம்ஸ்ட்ராங் ஒளிப்பதிவாளராகவும், கலை இயக்குனராக எஸ்.எஸ்.மூர்த்தி, மற்றும் சண்டைப் பயிற்சி 'நாக் அவுட்' நந்தா ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். நடிகர், நடிகை மற்றும் பிற தொழில்நுட்பக் கலைஞர்களின் தேர்வு தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. குறும்பட இயக்குனராக, விமர்சகராக, எழுத்தாளராக... என பல பரிமாணங்களில் பயணித்துக் கொண்டிருக்கும் 'கேபிள்' சங்கரின் இப்படம், தமிழ் சினிமாவை கொஞ்சம் வித்தியாசப்படுத்திக் காட்டும் என நம்பலாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;