சிகரத்தில் ஆரம்பித்த 'சிகரம் தொடு...!'

சிகரத்தில் ஆரம்பித்த 'சிகரம் தொடு...!'

செய்திகள் 9-May-2013 2:22 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

'கும்கி' விக்ரம் பிரபு, மோனல் கஜார் ஜோடியாகவும், முக்கிய கேரக்டர்களில் சத்யராஜ், 'எதிர்நீச்சல்' சதீஷ், கோவை சரளா மற்றும் பலர் நடிக்க, 'தூங்கா நகரம்' கௌரவ் இயக்கிக்கொண்டிருக்கும் படம், 'சிகரம் தொடு'. யூடிவி நிறுவனம் பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு ஹரித்வாரில் உள்ள சண்டி தேவி கோவிலில் துவங்கியது. படத்தின் தலைப்புக்குத் தகுந்தபடி, ஹிமாலய மலைப்பகுதியில் படப்பிடிப்பினைத் துவக்கியுள்ளது 'சிகரம் தொடு' படக்குழு...! தற்போது ஹரித்வார் மற்றும் ரிஷிகேஷ் பகுதியில் தொடர்ந்து வளர்ந்து வரும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார், விஜய் உலகநாதன் ஒளிப்பதிவு செய்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நெருப்புடா - ஆலங்கிலியே பாடல் வீடியோ


;