உதயநிதி ஸ்டாலின் 4 முறை பார்த்த படம்!

உதயநிதி ஸ்டாலின் 4 முறை பார்த்த படம்!

செய்திகள் 9-May-2013 12:52 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

நிவின் பௌலி, நஸ்ரியா நசீம் நடிப்பில் அல்ஃபோன்ஸ் புத்ரன் இயக்கியிருக்கும் படம் ‘நேரம்’. சமீபத்தில் இப்படத்தின் ஆடியோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருப்பதோடு, படத்தின் மீதும் பெரிய எதிர்பார்பு ஏற்பட்டிருக்கிறது. இப்படம் ஒரே நேரத்தில் தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளில் வெளியாக இருக்கிறது.

இப்படத்தை தமிழில் உதயநிதி ஸ்டாலினின் ‘ரெட் ஜெயன்ட் மூவீஸ்’ நிறுவனம் வெளியிடுகிறது. முதல் ப்ரிவ்யூவிலேயே இந்த படத்தை பார்த்து ரசித்த உதயநிதி ஸ்டாலின், படத்தின் விநியோக உரிமையை வாங்கியதோடு மீண்டும் மூன்று முறை படத்தைப் பார்த்து ரசித்தாராம். வரும் மே 17-ல் இப்படம் திரைக்கு வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

12-12-1950 - டிரைலர்


;