தனுஷுடன் மோதும் திருட்டுப்பயல்!

தனுஷுடன் மோதும் திருட்டுப்பயல்!

செய்திகள் 7-May-2013 12:29 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில், தனுஷ் - சோனம் கபூர் நடித்திருக்கும் ஹிந்திப் படம் ‘ரான்ஜனா’. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், பாடல்களும், டிரைலரும் பெரிய அளவில் வெற்றிபெற்றுள்ளன. தனுஷ் நடித்திருக்கும் முதல் ஹிந்திப் படமான ‘ரான்ஜனா’ ஜூன் 21-ஆம் தேதி ரிலீஸாகிறது. இதே நாளில் சுசி கணேசன் ஹிந்தியில் இயக்கியிருக்கும் ‘திருட்டுப் பயலே’ படத்தின் ரீ-மேக்கான ‘ஷாட் கட் ரோமியோ’ படமும் வெளியாக இருக்கிறது.

தமிழில் ஜீவன் நடித்த பாத்திரத்தில் ஹிந்தியில் நீல் நித்தின் நடிக்க, மாளவிகா நடித்த வேடத்தில் அமீஷா பட்டேலும், சோனியா அகர்வால் நடித்த கேரக்டரில் பூஜா குப்தாவும் நடித்துள்ளனர். இப்படத்தை ‘சுசி கணேசன் புரொடக்‌ஷன்ஸ்’ என்ற பேனரில் மஞ்சரி சுசி கணேசன் தயாரித்திருக்கிறார். பாலிவுட்டில் இரண்டு கோலிவுட் பிரபலங்களின் படங்கள் ஒரே தினத்தில் வெளியாகி மோத இருப்பது பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தியிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

VTV 2 ஆம் பாகத்தில் நான் தான் ஜெஸ்ஸி - மேகா ஆகாஷ்


;