கமல் - ஜெயராம் இணையும் 'நடன்'

கமல் - ஜெயராம் இணையும் ‘நடன்’

செய்திகள் 7-May-2013 11:51 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

மலையாளத்தில் நிறைய ஹிட் படங்களை தந்த கூட்டணி மலையாள இயக்குனர் கமல் - ஜெயராம். இவர்கள் இருவரும் கடைசியாக இணைந்த ‘ஸ்வப்ன சஞ்சாரி’ படமும் நல்ல வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து கமல் இயக்கத்தில், ஜெயராம் ‘நடன்’ என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். இப்படத்தின் கதாநாயகி மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது.

கமலின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘செல்லுலாய்டு’ திரைப்படம் பல தேசிய விருதுகளையும், மாநில அரசு விருதுகளையும் பெற்றதோடு, ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டையும் பெற்று பேசப்பட்ட படமாகும். இந்த கமல் வேறு யாருமல்ல தமிழில் பிரசாந்த், ஷாலினி நடித்த ‘பிரியாத வரம் வேண்டும்’ என்ற படத்தை இயக்கியவர்தான்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு பக்க கதை - டிரைலர்


;