மீண்டும் ஒரு பீட்சா!

மீண்டும் ஒரு பீட்சா!

செய்திகள் 7-May-2013 10:35 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘பீட்சா’ படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அதேபோன்ற த்ரில்லர் படங்கள் அதிகம் உருவாகி வருகிறது. அந்த வரிசையில் ரசிகர்களை மிரள வைக்கும் வகையில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் படம் ‘ஆதியும் அந்தமும்’. என்.கே.கிராஃப்ட் பிரைவேட் லிமிடெட் மற்றும் ஆர்.எஸ்.ஆர். ஆகிய இரண்டு நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தை கௌஷிக் இயக்கியிருக்கிறார்.

வாசன் ஒளிப்பதிவு செய்ய, எல்.கணேஷ் இசை அமைத்திருக்கிறார். இப்படத்தில் அஜய், புதுமுகம் கவிதா ஸ்ரீனிவாஸ் கதாநாயகன், கதாநாயகியாக நடித்திருக்கிறார்கள். மும்பையைச் சேர்ந்த கவிதா ஸ்ரீனிவாஸ் நடனம், களரி, சண்டை ஆகியவற்றில் நல்ல பயிற்சி பெற்றவர் என்பதோடு நன்றாக தமிழ் பேசத் தெரிந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;