ஆண்ட்ரியா நடிக்க மறுத்த வேடத்தில் ஸ்வாதி!

ஆண்ட்ரியா நடிக்க மறுத்த வேடத்தில் ஸ்வாதி!

செய்திகள் 6-May-2013 11:41 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘அன்னயும் ரசூலும்’ மலையாளப் படத்தில் ஜோடியாக நடித்த ஃபஹத் பாசிலும், ஆண்ட்ரியாவும் மீண்டும் ‘நோர்த் 24 காதம்’ என்ற மலையாளப் படத்தில் ஜோடியாக நடிப்பதாக இருந்தது. இந்நிலையில் ஃபஹத் பாசில் ஆண்ட்ரியாவை காதலிப்பதாக ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

ஆனால் இதை மறுத்திருந்தார் ஆண்ட்ரியா. இந்த பிரச்சனை காரணமாகவும், வேறு சில படங்களில் பிஸியாக இருப்பதாலும் ஆண்ட்ரியா ‘நார்த் 24 காதம்’ படத்தில் நடிக்கவில்லை. அவருக்குப் பதிலாக ‘சுப்பிரமணியபுரம்’ புகழ் ஸ்வாதி நடிக்கிறார். சமீபத்தில் வெளியான ‘ஆமேன்’ மலையாளப் படத்தில் ஃபஹத் பாசிலும், ஸ்வாதியும் இணைந்து நடித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;