இயக்குனர் சங்கத்திற்கு புதிய கட்டிடம்...!

இயக்குனர் சங்கத்திற்கு புதிய கட்டிடம்...!

செய்திகள் 4-May-2013 2:03 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள புதிய அலுவலகத்தின் திறப்புவிழா, மே 6 அன்று நடைபெறவிருக்கிறது. திரைப்பட இயக்குனர்கள் ஆர்.கே.செல்வமணி, ஹரி ஆகியோரது தலைமையில், வின்சென்ட், தாசரி நாராயணராவ், டி,ராஜேந்தர், கிருஷ்ணன் முன்னாட், மோகன் காந்திராமன், ஜி.எம்.குமார், எஸ்.ஏ.சந்திர சேகரன், ஆர்.சி.சக்தி ஆகிய இயக்குனர்கள் முன்னிலையில், இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் மற்றும் பாரதிராஜா ஆகியோர் புதிய கட்டிடத்தினை திறந்துவைக்கிறார்கள். சென்னை, வளசரவாக்கம் தேவி கருமாரியம்மன் நகரில், மூன்று தளங்களுடன் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டுள்ள இப்புதிய கட்டிடத்திற்கு 'படைப்பகம்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணிவரை நடக்கும் விழா நிகழ்சிகள் அனைத்தையும், இயக்குனர்கள் சங்க இணையதளமான www.tantis.org -ல் நேரடி ஒளிபரப்பாகக் காணாலாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;