வசூல் மழையில் அயன் மேன் 3

வசூல் மழையில் அயன் மேன் 3

செய்திகள் 4-May-2013 11:15 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘மார்வல் ஸ்டுடியோஸ்’ தயாரிப்பில் வெளிவரும் படங்கள் என்றால் வசூல் பற்றி சொல்லத் தேவையில்லை. தியேட்டர்களின் மொத்த கல்லாவையும் குத்தகைக்கு எடுத்துக் கொள்வார்கள். ஏற்கெனவே இரண்டு பாகங்கள் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற ‘அயன் மேன்’ படத்தின் மூன்றாம் பாகம் அமெரிக்காவைத் தவிர உலகமெங்கும் சமீபத்தில் வெளியானது (நேற்று முதல் அமரிக்காவிலும் வெளியாகி உள்ளது).

மிகுந்த எதிர்பார்ப்போடு வெளியான இப்படத்தின் முதல் வார வசூல் மட்டும் 200 மில்லியன் டாலர்களாம் (கிட்டத்தட்ட 1000 கோடி ரூபாய்). மார்வல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் வெளிவந்த ‘அவெஞ்சர்ஸ்’ மட்டுமே ஏற்கெனவே இந்த சாதனையைச் செய்துள்ளது. தற்போது வெளியான 9 நாட்களில் 300 மில்லியன் டாலர்களுக்கும் மேலாக வசூல் வேட்டை நடத்திக் கொண்டிருக்கிறது. தற்போது அமெரிக்காவிலும் வெளியாகியிருப்பதால் இந்த ‘அயன் மேன் 3’ வசூலில் இன்னும் பெரிய வரலாறு படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராபர்ட் டௌனி, கெய்நத் பால்ட்ரோ, டான் சீடில் உள்ளிட்ட ஹாலிவுட் பிரபலங்கள் நடித்திருக்கும் இப்படத்தை ஷேன் பிளாக் இயக்கியிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;