ஹேப்பி பர்த்டே ஜெஸ்ஸி...

ஹேப்பி பர்த்டே ஜெஸ்ஸி...

செய்திகள் 4-May-2013 11:06 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஜெயம் ரவியுடன் ‘பூலோகம்’, ஜீவாவுடன் ‘என்றென்றும் புன்னகை’, தமிழ் தெலுங்கில் ஒரே நேரத்தில் தயாராகும் ‘ரம்’ என ரவுண்டு கட்டி நடித்துக் கொண்டிருக்கும் நடிகை த்ரிஷாவிற்கு இன்று பிறந்தநாள். 1999-ல் ‘ஜோடி’ படத்தில் ஒரு சிறிய வேடத்தில் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான த்ரிஷா 2002-ல் நடிகர் சூர்யாவுடன் ‘மௌனம் பேசியதே’ படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பின்பு விக்ரம், சூர்யா, விஜய், அஜித், கமல்ஹாசன் என அத்தனை முன்னணி ஹீரோக்களுடன் நடித்து புகழின் உச்சிக்கு வந்தார். அதேபோல் இளைய தலைமுறை நடிகர்களான சிம்பு, தனுஷ், ஜீவா, ஜெயம் ரவி ஆகியோருக்கும் த்ரிஷாதான் ஃபேவரைட் ஹீரோயின். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் முன்னணி நடிகையாகத் திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகை த்ரிஷா. கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த இந்த கனவுக்கன்னிக்கு நாமும் பிறந்தநாள் வாழ்த்துக்களைச் சொல்வோம்.... ஹேப்பி பர்த்டே ஜெஸ்ஸி..!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

;