தனுஷ், வெற்றிமாறன், தயாநிதி அழகிரி இணையும் படம்!

தனுஷ், வெற்றிமாறன், தயாநிதி அழகிரி இணையும் படம்!

செய்திகள் 4-May-2013 10:27 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ், இயக்குனர் வெற்றி மாறன் கூட்டணியில் தயாநிதி அழகிரி ஒரு படத்தை தயாரிக்கிறார். இது குறித்து டுவிட்டர் இணையதளத்தில், ’’மூன்று வருடங்களாக நானும், தனுஷும், வெற்றிமாறனும் எடுக்கத் திட்டமிட்டிருந்த ஒரு கதையை விரைவில் படமாக்க இருக்கிறோம். அதற்கான தொழில்நுட்ப கலைஞர்கள் எல்லாம் முடிவாகிவிட்டது. என்னோட தயாரிப்பில் அதிக பொருட் செலவில் தயாராக இருக்கும் இப்படம் எல்லோருக்கும் பிடிக்கும் விதமாக இருக்கும். இந்தப் படம் குறித்த மற்ற தகவல்களை விரைவில் அறிவிப்பேன்’’ என்று குறிப்பிட்டிருக்கிறார் தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;