அடிதடியை வெறுக்கும் நாயகி...!

அடிதடியை வெறுக்கும் நாயகி...!

செய்திகள் 3-May-2013 10:55 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

'மாயி', 'திவான்' 'மாணிக்கம்' ஆகிய படங்களை இயக்கிய சூரிய பிரகாஷ், சிறிய இடைவெளிக்குப் பிறகு இயக்கியுள்ள புதிய படம் 'வருசநாடு'. இதில் புதுமுகங்கள் குமரன், சிருஷ்டி டாங்கே ஆகியோர் ஜோடியாகவும், முக்கிய வேடங்களில் சிங்கமுத்து, மயில்சாமி, எம்.எஸ்.பாஸ்கர், சிங்கம்புலி, ராஜ்கபூர், சந்தானபாரதி மற்றும் பலரும் நடித்துள்ளனர். அடிதடியை விரும்பும் நாயகனுக்கும், அடிதடியைப் பார்த்தாலே பதறி ஓடும் நாயகிக்கும் இடையேயான காதல், மோதலை கமர்ஷியலாகச் சொல்லியிருக்கிறாராம், இயக்குனர் சூரிய பிரகாஷ். 'மாயி ஃபிலிம்ஸ்' சார்பில் ஆர்.செந்தில்குமார் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல், வாடிப்பட்டி, நிலக்கோட்டை, பெரியகுளம், வத்தலகுண்டு, ராமேஸ்வரம் ஆகிய பகுதிகளில் நடைபெற்று முடிந்துள்ளது. விரைவில் இப்படம் திரைக்கு வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எந்திரலோகத்து சுந்தரியே வீடியோ பாடல் - 2.0


;