ஹீரோ ஆகும் பிரபல நடிகையின் மகன்!

ஹீரோ ஆகும் பிரபல நடிகையின் மகன்!

செய்திகள் 3-May-2013 10:38 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

பிரபல நடிகை ஜெயபாரதி, நடிகர் சத்தார் ஆகியோரின் மகன் க்ரிஷ். இவர், பிரபல இயக்குனர் சித்திக் இயக்கத்தில் 'லேடீஸ் அன்ட் ஜென்டில்மேன்' என்ற மலையாளப் படத்தில் மோகன்லாலுடன் நடித்து அறிமுகமானவர். இந்தப் படம் சமீபத்தில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தைத் தொடர்ந்து க்ரிஷ் 'கல்கி' என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். சுபில் சுரேந்திரன் இயக்கும் இப்படம் மலையாளம், தமிழ் என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் தயாராகி வருகிறது. தமிழுக்கான தலைப்பு விரைவில் அறிவிக்கப்படும்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;