20 வயது இளைஞனுக்கு அம்மாவான காவ்யா மாதவன்!

20 வயது இளைஞனுக்கு அம்மாவான காவ்யா மாதவன்!

செய்திகள் 3-May-2013 10:26 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

நடிகை காவ்யா மாதவன், மகனுக்கு இருபது வயது ஆகிறவரைக்கும்தான் நடிப்பாராம். அதற்கு பிறகு நடிக்க மாட்டாராம்! அவர் இப்படி கூறியிருப்பது அவரது நிஜ வாழ்க்கையில் இல்லை, அவர் இப்போது நடித்துக் கொண்டிருக்கும் 'என்டெ அம்மா' என்ற படம் சம்பந்தமாகதான்! இந்த படத்தின் கதை காவ்யா மாதவனின் பாத்திரத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. அதனால் படத்தில் திருமணத்திற்கு முன், திருமணத்திற்கு பின் என மாறுபட்ட பல வேடங்களில் தோன்றுவார். ஏற்கெனவே ஒரு சில படங்களில் சின்ன வயது குழந்தையின் தாயாக நடித்திருக்கும் காவ்யா மாதவன், இருபது வயது இளைஞரின் அம்மாவாக நடிப்பது இதுதான் முதல் முறை! 'என்டெ அம்மா' படத்தின் இயக்குனர் அனில் குஞ்சப்பா, காவ்யா மாதவனின் உறவுக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;