‘இரண்டாம் உலகம்’ ரிலீஸ் எப்போது?

‘இரண்டாம் உலகம்’ ரிலீஸ் எப்போது?

செய்திகள் 3-May-2013 9:59 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

செல்வராகவன் இயக்கத்தில் ஆர்யா - அனுஷ்கா நடித்த ‘இரண்டாம் உலகம்’ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிந்தபின்பும் சத்தமில்லாமல் அமைதியாகவே இருந்து வந்தது. தற்போது, இயக்குனர் செல்வராகவன் தன் மௌனம் கலைந்திருக்கிறார். இசை வெளியீடு குறித்த தகவலுடன் ‘இரண்டாம் உலகம்’ படத்தின் ‘ஃபர்ஸ்ட் லுக்’ போஸ்டர் வரும் மே 4ஆம் தேதி வெளியாக இருக்கிறதாம். அதன் பின்பு ஜூன் முதல் வாரத்தில் படத்தின் டீஸரையும், ஆகஸ்ட் மாதத்தில் படத்தையும் வெளியிடத் திட்டமிட்டிருப்பதாக இயக்குனர் செல்வராகவன் தனது ட்வீட்டில் குறிப்பிட்டிருக்கிறார். பிவிபி சினிமா தயாரித்திருக்கும் இப்படத்திற்கு இசையமைத்துள்ளதன் மூலம் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் முதல்முறையாக செல்வராகவனுடன் கைகோர்த்திருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;