குஷ்புக்குப் பின் ஹன்சிகாதான் - சுந்தர்.சி புகழாரம்

குஷ்புக்குப் பின் ஹன்சிகாதான் - சுந்தர்.சி புகழாரம்

செய்திகள் 2-May-2013 3:21 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

குஷ்பு சுந்தர்.சியின் 'அவ்னி சினிமேக்ஸ்' நிறுவனம் தயாரித்திருக்கும் படம் 'தீயா வேலை செய்யணும் குமாரு'. இப்படத்தில் சித்தார்த், ஹன்சிகா மோத்வானி, சந்தானம் ஆகியோர் நடித்திருக்க, சுந்தர்.சி இயக்கியிருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் தியேட்டரில் இன்று காலை நடைபெற்றது. விழாவில் பாடல் சிடியை நடிகர் ஆர்யா வெளியிட, ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான கே.வி.ஆனந்த் பெற்றுக் கொண்டார். சித்தார்த், ஹன்சிகா மோத்வானி, இயக்குனர்கள் கே.எஸ்.ரவிக்குமார், ஆர்.கண்ணன், நலன் குமாரசாமி, பாண்டிராஜ், இசையமைப்பாளர் சத்யா, தயாரிப்பாளர்கள் 'யுடிவி' தனஞ்சயன், சசிகாந்த், டி.சிவா மற்றும் பலர் கலந்துகொண்டு வாழ்த்தினர். விழாவில் இயக்குனர் சுந்தர்.சி பேசும்பாது, ''நான் இதுவரை இயக்கிய நடிகைகளிலேயே குஷ்புவுக்கு அடுத்த படியாக ரொம்பவும் சின்சியரான, டெடிகேடட் ஆன நடிகை ஹன்சிகா மோத்வானிதான்'' என்றார். இந்தப் படத்தை 'யுடிவி மோஷன் பிக்சர்ஸ்' நிறுவனம் வெளியிடுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;