‘கும்கி’ படத்திற்கு புதிய விருது!

‘கும்கி’ படத்திற்கு புதிய விருது!

செய்திகள் 2-May-2013 11:17 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

தமிழக ஆளுனர் ரோசையா தலைமையில் ‘நாகி ரெட்டி நினைவு விருது வழங்கும் விழா’ சென்னையில் நடைபெற்றது. ஒவ்வொரு வருடமும் சிறந்த படத்தை தேர்ந்தெடுத்து கௌரவிக்கும் இந்த விழாவில் இந்த வருடம் விக்ரம் பிரபு, லக்ஷ்மி மேனன், தம்பி ராமையா நடிப்பில் பிரபு சாலமன் இயக்கிய 'கும்கி ' திரைப்படம் சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. தயாரிப்ப்பாளர் போஸ் சார்ப்பில் இயக்குனர் பிரபு சாலமன், நாயகி லக்ஷ்மி மேனன் ஆகியோர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், கவிஞர் வாலி ஆகியோர் முன்னிலையில் ஆளுநரிடமிருந்து விருதினைப் பெற்றுக் கொண்டனர். நடிகை தேவயானி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள நகைச்சுவை நடிகர் அஷ்வின், தம்பி ராமையா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;