திரைப்பட மேதை சத்யஜித் ரே...!

திரைப்பட மேதை சத்யஜித் ரே...!

செய்திகள் 2-May-2013 11:09 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

இந்தியாவின் மிகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவரான சத்யஜித் ரே பிறந்த தினம் இன்று...! ஓவியராக தன்னுடைய வாழ்க்கையைத் துவக்கி, எழுத்தாளராக, இசையமைப்பாளராக, திரைப்பட இயக்குனராக, திரைப்பட தயாரிப்பாளராக என பன்முகத்தன்மை கொண்ட இவர், தன்னுடைய திரைப்படப் பணிகளுக்காக ஆஸ்கார் விருதினைப் பெற்ற முதல் இந்தியர் என்ற சிறப்பினையும் பெற்றவர்... முப்பதுக்கும் அதிகமான திரைப்படங்களை இயக்கியுள்ள இவர், இந்திய சினிமாவின் தரத்தை உலகளவில் உயர்த்திப் பிடித்தவர். இவரது 'பதேர் பாஞ்சாலி', 'அபராஜிதோ', 'அபுர் சன்சார்' முதலிய படங்கள் உலகப் புகழ் பெற்றவை!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;