ஃபஹத் பாசிலுக்கு ‘நோ’ சொன்ன ஆண்ட்ரியா!

ஃபஹத் பாசிலுக்கு ‘நோ’ சொன்ன ஆண்ட்ரியா!

செய்திகள் 2-May-2013 2:27 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

'அன்னயும் ரசூலும்' என்ற மலையாள படத்தில் இணைந்து நடித்ததன் மூலம் ஃபஹத் பாசில் - ஆண்ட்ரியா இடையே காதல் என்றும், மீண்டும் இருவரும் சேர்ந்து 'நார்த் 24 காதம்' என்ற படத்தில் நடிக்கிறார்கள் என்றும் செய்திகள் வந்துகொண்டிருந்த நிலையில் ஆண்ட்ரியா தரப்பினர் அதை மறுத்துள்ளனர். ''ஆண்ட்ரியா வேறு சில படங்களில் பிஸியாக இருப்பதால், 'நார்த் 24 காதம்' படத்தில் ஃபஹத் பாசிலுடன் நடிக்கவில்லை. அடுத்து அவர் நடிக்கவிருக்கும் மலையாள படம் அனில் சி. மேனன் இயக்கும் 'லண்டன் பிரிட்ஜ்'. இப்படத்தில் அவர் பிருத்திவிராஜுடன் நடிக்கிறார்'' என்று தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;