‘‘எனக்கு ஈகோ கிடையாது’’ - யுவன் ஷங்கர் ராஜா

‘‘எனக்கு ஈகோ கிடையாது’’ - யுவன் ஷங்கர் ராஜா

செய்திகள் 30-Apr-2013 2:28 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஃபோட்டான் கதாஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ராம் இயக்கி நடித்திருக்கும் ‘தங்க மீன்கள்’ படத்தின் இசை வெளியீடு இன்று சென்னை சத்யம் திரையரங்கில் வெகு விமரிசையாக நடைபெற்றது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல் சிடியை இயக்குனர் பாலுமகேந்திரா வெளியிட இயக்குனர் ராமின் மகள் பெற்றுக் கொண்டார். விழாவில் பேசிய இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா சமீபத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘மரியான்’ படத்திற்காக பாடிய பாடலைப்பற்றி குறிப்பிட்டபோது, ‘‘என்னோட ரசிகர்கள் யாரும் ஃபேஸ்புக், டிவிட்டரில் சண்டை போட்டுக்கொள்ள வேண்டாம். எனக்கு யாருடனும் எந்த ஈகோவும் கிடையாது. ஏ.ஆர்.ரஹ்மான் என்னிடம் தொடர்புகொண்டு பாடலைப் பாடும்படி கேட்டார். நானும் ஒரு பாடகராகச் சென்று அந்தப் பாடலைப் பாடிக் கொடுத்தேன். எனக்கு இது ஒரு நல்ல அனுபவம்’’ என்று கூறினார்.

‘தங்க மீன்கள்’ படத்தை ஜே.எஸ்.கே. ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் வாங்கி வெளியிட இருக்கிறது.

இப்படத்திற்குப் பின்னர் இயக்குனர் ராம் ‘தரமணி’ என்னும் படத்தை இயக்க இருக்கிறாராம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;