ஜொலிக்கும் ‘துருவ நட்சத்திரம்’!

ஜொலிக்கும் ‘துருவ நட்சத்திரம்’!

செய்திகள் 30-Apr-2013 11:40 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஃபோட்டோன் கதாஸ் புரொடக்ஷன்ஸ் பேனரில் கௌதம் வாசுதேவ் மேனன் தயாரித்து, இயக்கி சூர்யா நடிக்கும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்தான் இன்றைய 'ஹாட் டாபிக்'. வித்தியாசமான பேக்ரவுன்டுடன் ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் தலைப்பை மிக அழகாக வடிவமைத்திருக்கிறார்கள். வரிசையாக 11 பெயர்களை எழுதி அதற்குக் கீழே ‘எண் 12ஆவது மனிதனைத் தேடிக்கொண்டிருக்கிறேன்’ என எழுதி அதற்குக் கீழே ‘பேஸ்மன்ட்’ எனக் கையெழுத்திட்டிருப்பதுபோல் போஸ்டரை வடிவமைத்திருக்கிறார்கள். அதேபோல் ‘துருவ நட்த்திரம்’ லோகோவில் ‘த்’ எழுத்திற்கு புள்ளிக்குப் பதிலாக ‘12’ என்ற எண்ணை பொருத்தியிருக்கிறார்கள். படத்தின் போஸ்டரே பல கதைகளைச் சொல்வதுபோல் இருப்பதால் இப்போதே எதிர்பார்ப்பு எகிறத் தொடங்கியிருக்கிறது. மே 2 முதல் படப்பிடிப்பு துவங்குகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

;