பாய்ச்சலுக்குத் தயாராகும் 'சிங்கம் 2'

பாய்ச்சலுக்குத் தயாராகும் 'சிங்கம் 2'

செய்திகள் 30-Apr-2013 11:27 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஹரி இயக்கத்தில், சூர்யா நடிக்கும் 'சிங்கம் 2' படத்தின் படப்பிடிப்பு தற்போது தூத்துக்குடியில் நடந்து கொண்டிருக்கிறது. ரசிகர்களிடையே மட்டுமல்லாமல் திரையுலகினரிடையேயும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்றோடு நிறைவடைகிறது. இந்தப் படத்தில் சூர்யாவுடன் அனுஷ்கா, ஹன்சிகா மோத்வானி, விவேக், சந்தானம் மற்றும் பலர் நடிக்க தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைத்திருக்கிறார். படத்தின் இசைவெளியீட்டை மிகப்பிரம்மாண்டமான முறையில் ஜூன் 1ஆம் தேதி சென்னையில் நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்களாம். இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.லக்ஷ்மன் குமார் தயாரிக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

;