ஒரு பாடலுக்கு 15 லட்சம் ரூபாய்!

ஒரு பாடலுக்கு 15 லட்சம் ரூபாய்!

செய்திகள் 29-Apr-2013 3:16 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் வழங்க ஒலிம்பியா மூவிஸ் பட நிறுவனம் தயாரிப்பில் எழில் இயக்கும் படம் ‘தேசிங்கு ராஜா’. இப்படத்திற்காக விமல் & பிந்து மாதவி பங்குபெறும் ‘அம்மாடி அம்மாடி அய்யோடி அய்யோடி...’ என்ற பாடல் படமாக்கப்பட்டது. இப்பாடலுக்காக பழ குடோன் போல் பிரம்மாண்டமான செட் ஒன்றை கிட்டத்தட்ட 15 லட்சம் ரூபாய் செலவில் உருவாக்கினார்களாம். காமெடிக்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்தில் சூரி, சார்லி, சிங்கம் புலி, சிங்கமுத்து, ரவிமரியா, சாம்ஸ், ‘ஆடுகளம் நரேன், ஞானவேல், வடிவுக்கரசி ஆகியோர் நடிக்கிறார்கள். கிட்டத்தட்ட படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்த நிலையில் இப்படத்தின் பாடல்கள் விரைவில் வெளியிடப்படுமாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;