அரசியலுக்கு வருவாரா ஷாருக் கான்?

அரசியலுக்கு வருவாரா ஷாருக் கான்?

செய்திகள் 29-Apr-2013 1:08 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

ரோஹித் ஷெட்டி இயக்கத்தில், ஷாருக்கான், தீபிகா படுகோனே இணைந்து நடிக்கும் ஹிந்திப் படம் 'சென்னை எக்ஸ்பிரஸ்'. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மூணாறில் நடைபெற்று வருகிறது. இதற்காக கேரளா வந்த ஷாருக் கானிடம் நிருபர்கள், “மலையாள படத்தில் நடிப்பீர்களா? அரசியலுக்கு வருவீர்களா?'' போன்ற கேள்விகள் கேட்க, அதற்கு பதில் அளித்த ஷாருக்கான், “அரசியலுக்கும் எனக்கும் ரொம்ப தூரம், நான் ஒருபோதும் அரசியலுக்கு வரமாட்டேன் என்றும் மலையாள திரைப்படங்களும், கேரளாவும் எனக்கு ரொம்பப் பிடிக்கும், மம்முக்கா, லாலேட்டன் ஆகியோரது ரசிகன் நான், ஆனால் எனக்கு மலையாளம் தெரியாததால் மலையாள திரைப்படங்களில் நடிக்க மாட்டேன்'' என்று கூறினார்.

தீபிகா படுகோனேயிடம், கேரளா பற்றி கேட்டபோது, “கேரளாவுக்கு வரும்போது, சொந்த வீட்டிற்கு வருகிற மகிழ்ச்சி ஏற்படுகிறது'' என்று ஜாலியாகக் கூறியிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;