நோர்வே திரைப்பட விழா விருதுகள் 2013!

நோர்வே திரைப்பட விழா விருதுகள் 2013!

செய்திகள் 29-Apr-2013 12:13 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

தமிழில், சிறந்த தமிழ்த் திரைப்படம், சிறந்த நடிகர், நடிகை, இயக்குநர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை தேர்வு செய்து நோர்வே திரைப்பட விழாக் குழுவினர் வருடந்தோறும் விருதுகள் வழங்கி கௌரவித்து வருகிறார்கள். இந்த வருடத்திற்கான விருதுகள் வழங்கும் விழா சமீபத்தில் நார்வேயில் சிறப்பாக நடைபெற்றது.

இதில் சிறந்த படமாக 'வழக்கு எண் 18/9', இந்தப் படத்தை தயாரித்த 'திருப்பதி பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடொட்' நிறுவனம் சிறந்த தயாரிப்பு நிறுவனமாக தேர்வாகி விருது பெற்றது. அத்துடன் சிறந்த நடிகராக விஜய் சேதுபதி (நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்), சிறந்த நடிகையாக லட்சுமி மேனன் (கும்கி), சிறந்த இயக்குனராக பிரபு சாலமன் (கும்கி), சிறந்த இசை அமைப்பாளராக டி. இமான் (கும்கி) ஆகியோருடன் எஸ்.பி. பாலசுப்ரமணியம், சரத்குமார், மணிவண்ணன், விவேக், சந்தானம், பிரகாஷ் ராஜ், விஜய் ஆண்டனி, சரண்யா பொன்வண்ணன் மற்றும் பலருக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;