‘திருமதி தமிழ்’ படத்தை மிஞ்சிய ‘இசக்கி’

‘திருமதி தமிழ்’ படத்தை மிஞ்சிய ‘இசக்கி’

செய்திகள் 29-Apr-2013 12:08 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

தேவயானி நடிப்பில் அவரது கணவர் ராஜகுமாரன் இயக்கி நடித்த ‘திருமதி தமிழ்’ படத்தின் இசைவெளியீட்டை ‘நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக’ தமிழகத்தின் பல பகுதிகளில் நடத்தி திரையுலகினரை வாயடைக்கச் செய்தார்(!).

தற்போது ராஜகுமாரனை மிஞ்சும் அளவுக்கு புதிதாகக் கிளம்பியுள்ளார்கள் ‘இசக்கி’ படக்குழுவினர். மெரிட் மீடியா நிறுவனம் தயாரிப்பில், எம்.கணேசன் இயக்கத்தில் சரண் - ஆஷிகா நடித்திருக்கும் இப்படத்தின் இசைவெளியீட்டை வித்தியாசமாக நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்களாம். அதாவது, ‘இந்திய திரை உலகில் முதல் முறையாக தமிழகத்தின் 100 நகரங்களில் மே 5ல் இசை வெளியீட்டு விழா’ என்ற வாசகத்தோடு வெளிவந்திருக்கிறது ‘இசக்கி’ படத்தின் பத்திரிகை விளம்பரம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;