மறக்க முடியுமா ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக்கை...

மறக்க முடியுமா ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக்கை...

செய்திகள் 29-Apr-2013 11:55 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

எப்போதெல்லாம் நமக்கு ‘த்ரில்லர்’ படங்களின் நினைவு வருகிறதோ, அப்போதெல்லாம் ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக்கும் நம் கண்முன்னே வந்து செல்வார். தலை சிறந்த உலகப்படங்களின் பட்டியலில் முக்கிய இடம் பிடித்த இவருடைய ‘சைக்கோ’ படம்தான் இப்போது வரைக்கும் ‘சஸ்பென்ஸ் த்ரில்லர்’ படங்களுக்கு முன்உதாரணம்.

1899 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13-ல் லண்டனில் பிறந்த ஹிட்ச்காக், 1980 ஆம் ஆண்டு ஏப்ரல் 29-ம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸில் மரணமடைந்தார். வித்தியாசமான கேமரா கோணங்கள், புதுமையான காட்சியமைப்புகள், விசித்திரப் பாத்திரப் படைப்புகள் என சினிமா உலகிற்கு பல விஷயங்களைக் கற்றுத் தந்த ‘த்ரில்லர்’ படங்களின் தந்தையை சினிமா உலகம் என்றென்றும் மறக்காது. அவர் மறைந்த இந்த நாளில் நாமும் அவரை நினைவு கூர்வோம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;