‘திருப்புகழ்’ இப்போது ‘திரு-புகழ்’

‘திருப்புகழ்’ இப்போது ‘திரு-புகழ்’

செய்திகள் 29-Apr-2013 11:47 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

ரியல் ஸ்கிரீன் பட நிறுவனம் தயாரிக்க கே.அர்ஜுன ராஜா இயக்கும் படம் ‘திருப்புகழ்’. சென்னை, பாண்டி, திண்டுக்கல், கொடைக்கானல் போன்ற பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்று வரும் இப்படத்தின் தலைப்பை தற்போது ‘திரு-புகழ்’ என மாற்றியிருக்கிறார்கள்.

‘சுதந்திரமாக சிறகடித்துப் பறந்த ஒரு பெண்ணின் வாழ்க்கை, அவள் வயதுக்கு வந்த பின்பு எப்படி மாறுகிறது’ என்ற கருத்தை மையமாகக் கொண்டு உருவாகி வரும் படம் இப்படத்தில் திலீப்குமார், பிரபுராஜ் ஆகியோர் நாயகர்களாக நடிக்க திவ்யா சிங் நாயகியாக நடிக்கிறார். இவர்களைத் தவிர சீதா, நளினி, சுபலேகா, சுதாகர், ‘காதல்’ தண்டபாணி, ரியாஸ் கான், கஞ்சா கருப்பு ஆகியோர்களும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவை தேவராஜ் கவனிக்க, படத்திற்கு இசையமைக்கிறார் கே.ராம்ஜி.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;