ராதிகா சரத்குமாரின் அடுத்த ரீமேக்!

ராதிகா சரத்குமாரின் அடுத்த ரீமேக்!

செய்திகள் 29-Apr-2013 10:18 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

'டிராஃபிக்' என்ற மலையாள படத்தைத் தமிழில் 'சென்னையில் ஒரு நாள்' என்ற பெயரில் தயாரித்து மாபெரும் வெற்றிபெற்ற லிஸ்டின் ஸ்டீஃபன், ராதிகா சரத்குமார் கூட்டணி, அடுத்து மலையாளத்தில் வெற்றி பெற்ற 'சாப்பாக்குரிசு' என்ற படத்தை ரீ-மேக் செய்து தயாரிக்கிறார்கள். இந்தப் படத்தில் விமல், அனன்யா, பிரசன்னா, ஓவியா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்க இருக்கிறார்கள். இப்படத்தை 'கண்ணும் கண்ணும்' படத்தை இயக்கிய மாரிமுத்து இயக்குகிறார். 'நீர்ப்பறவை' படத்திற்கு இசை அமைத்த ரகுநந்தன் இசை அமைக்கிறார். 'சாப்பாக்குரிசு' மலையாள படத்தை தயாரித்தவர் லிஸ்டின் ஸ்டீஃபன் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;