வரலாறு படைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் - தனுஷ் கூட்டணி...

வரலாறு படைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் - தனுஷ் கூட்டணி...

செய்திகள் 29-Apr-2013 11:58 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

தனுஷ் முதன் முதலாக நடித்திருக்கும் ஹிந்திப் படம் 'ரான்ஜ்ஜனா'. அத்துடன் பாலிவுட் பிரபலம் பரத்பாலாவின் இயக்கத்தில் நடித்திருக்கும் தமிழ்ப் படம் 'மரியான்'. இந்த இரண்டு படங்கள் மீதுள்ள ரசிகர்களின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் ஜெட் வேகத்தில் எகிறிக் கொண்டிருக்கிறது. 'ரான்ஜ்ஜனா' படத்தின் டிரைலர் வெளியான 48 மணி நேரத்தில் இருபது லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் கண்டுகளித்திருக்கிறார்கள் என்றால், 'மரியான்' படத்தின் ‘நெஞ்சே எழு...’ பாடல் டீஸர் யு டியூப்-ல் வெளியாகிய இரண்டு நாட்களில் கிட்டத்தட்ட மூன்றரை லட்சம் பேர் ‘ஹிட்ஸ்’ஸைப் பெற்றுள்ளது. இந்த இரண்டு படங்களுக்கும் இசை அமைத்திருப்பவர் ஏ.ஆர்.ரஹ்மான் என்பது குறிப்பிடத்தக்கது.

'மரியான்' படத்தின் இயக்குனர் பரத்பாலாவும், இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் இணைந்த 'வந்தே மாதரம்', 'ஜன கண மன', 'ப்ரே ஃபார் மி பிரதர்' ஆகிய ஆல்பங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று, பேசப்பட்டது என்பது எல்லோருக்கும் நினைவிருக்கலாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;