மனம் கலங்கிய மம்தா மோகன்தாஸ்!

மனம் கலங்கிய மம்தா மோகன்தாஸ்!

செய்திகள் 27-Apr-2013 5:43 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

தமிழில், 'சிவப்பதிகாரம்', 'குரு என் ஆளு' போன்ற திரைப்படங்களில் நடித்த மம்தா மோகன்தாஸ், இப்போது மலையாளத் திரையுலகில் முன்னணி ஹீரோயினாக திகழ்ந்து வருகிறார். 'டாடி மம்மி வீட்டில் இல்லை..' என்று பாடி இளசுகளையெல்லாம் உற்சாகமடைய வைத்த இவர் சில வருடங்களுக்கு முன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இருந்தாலும் கொஞ்சமும் மனம் தளராமல் அதற்கான சிகிச்சையை முறையாக மேற்கொண்டு, நலம் பெற்று தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில், 'மம்தா மோகன்தாஸ் மீண்டும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்' என்று ஒரு சில மலையாள ஊடகங்கள் சமீபத்தில் செய்திகள் வெளியிட, அதைப் பார்த்து அதிர்ந்துபோன மம்தா, “அந்தச் செய்திகளில் சிறிதும் உண்மையில்லை, இது போன்ற செய்திகள் வெளியிடுவதற்கு முன் என்னிடம் அது பற்றி கேட்டிருக்கலாம்' என்று ரொம்பவும் மனம் கலங்கிய படி கருத்து தெரிவித்துள்ளார். புற்றுநோய் வியாதியால் பாதிக்கப்பட்டிருந்த நேரத்தில் அது சம்பந்தமான பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு போல்டாக, தைரியாமாக பதில் அளித்தவர் மம்தா மோகன்தாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;