அருண்குமார் அரவிந்த் இயக்கத்தில் ஃபஹத்!

அருண்குமார் அரவிந்த் இயக்கத்தில் ஃபஹத்!

செய்திகள் 27-Apr-2013 4:17 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

'காக்டெயில்', 'ஈ அடுத்த காலத்து' போன்ற வெற்றிப் படங்களை இயக்கியவர் அருண்குமார் அரவிந்த். மலையாளத் திரையுலகின் இளம் முன்னணி இயக்குனர்களில் பிரபலமான இவர் தற்போது இயக்கி வரும் படம் 'லெஃப்ட் ரைட் லெஃட்'. இதில் இந்திரஜித் கதாநாயகனாக நடிக்க, படத்தின் படப்பிடிப்புகள் முடிவுறும் நிலையில் இருக்கிறது. இந்தப் படத்தைத் தொடர்ந்து ஃபஹத் (இயக்குனர் பாசிலின் மகன்) கதாநாயகனாக நடிக்க, ஒரு படத்தை இயக்க இருக்கிறார் அருண்குமார் அரவிந்த். இப்படத்தின் கதையை பிரபல கதையாசிரியர் ஜெயமோகன் எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;