'வித்தியாச' விக்னேஷ்

'வித்தியாச' விக்னேஷ்

செய்திகள் 25-Apr-2013 6:42 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘வித்தியாச’ விக்னேஷ் ‘கிழக்குச் சீமையிலே’, ‘ஆச்சார்யா’, ‘கௌரவர்கள்’ ஆகிய படங்களில் நாயகனாக நடித்த நடிகர் விக்னேஷ் தற்போது பெயரிடப்படாத புதிய படமொன்றில் ஒப்பந்தமாகியிருக்கிறார். சஸ்பென்ஸ் த்ரில்லரான இப்படத்திற்காக தன் நடை, உடை, பாவனை என அத்தனை விஷயங்களிலும் புதுமையைப் புகுத்தி வித்தியாசமான கெட்டப்பில் நடிக்க இருக்கிறாராம். ராம்கிரிஸ் மிர்ணாலி இயக்கும் இப்படத்தை காயன்ஸ் பிக்சர்ஸ் பட நிறுவனம் தயாரிக்கிறது. ரவி சீனிவாசன் ஒளிப்பதிவில் கொடைக்கானல், மூணார், கேரளா போன்ற பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தத் திட்டமிட்டுள்ள இப்படத்தில் நடிக்க இருக்கும் மற்ற கலைஞர்களின் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;