மீண்டும் ப்ரியதர்ஷன் - மோகன்லால் கூட்டணி

மீண்டும் ப்ரியதர்ஷன் - மோகன்லால் கூட்டணி

செய்திகள் 25-Apr-2013 12:46 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

பாசில் இயக்கி, மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற 'மணிச்சித்திரத்தாழ்' படம் தமிழில் 'சந்திரமுகி'யாக வந்து சூப்பர் ஹிட்டாக ஓடியதோடு, மற்ற மொழிகளிலும் ரீ-மேக் ஆனது. 'மணிச்சித்திரத்தாழ்' படத்தில் டாக்டர் சன்னியாக மோகன்லாலும் (தமிழில் ரஜினிகாந்த் நடித்த டாக்டர் சரவணன் வேடம்), உன்னித்தான் என்ற பாத்திரத்தில் இன்னசென்டும் நடித்திருந்தனர். இப்போது அந்த இரண்டு கதாபாத்திரங்களை மையமாக வைத்து இயக்குனர் ப்ரியதர்ஷன் ஒரு கதையை உருவாக்கி, அதில் மோகன்லாலையும், இன்னசென்டையும் நடிக்க வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார். இப்படத்தின் கதை 'மணிச்சித்திரத்தாழ்' படத்தின் கதையிலிருநது முற்றிலும் மாறுபட்டது என்றாலும், சன்னி, உன்னித்தான் பாத்திரப் பெயர்களை பயன்படுத்த அப்படத்தின் கதையாசிரியர் மது முட்டம் மற்றும் இயக்குனர் பாசிலிடம் முறையாக அனுமதி பெற்றிருக்கிறார்களாம். ப்ரியதர்ஷன் - மோகன்லால் கூட்டணியில் நிறைய மலையாள படங்கள் ஹிட் ஆகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;