‘பாலாவை வற்புறுத்தினார்கள்!’’ - அனுராக் காஷ்யப்

‘பாலாவை வற்புறுத்தினார்கள்!’’ - அனுராக் காஷ்யப்

செய்திகள் 25-Apr-2013 10:03 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

கேன்ஸ் திரைப்பட விழா 2013-ல் ‘டைரக்டர்ஸ் ஃபோர்ட்நைட்’’ பிரிவில் திரையிடப்படுவதற்கு இயக்குனர் அனுராக் காஷ்யப்பின் ‘அக்லி’ திரைப்படம் தேர்வாகியுள்ளது.

இதுகுறித்து சமீபத்தில் பேசிய இயக்குனர் அனுராக் காஷ்யப் ‘‘கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்படுவதற்கு பெரும்பாலும் ஹிந்திப்படங்களே தேர்வாகின்றன. அப்படியென்றால் மற்றமொழிப் படங்களுக்கு அந்தத் தகுதி இல்லையா என என்னிடம் கேட்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை எல்லா மொழிப் படங்களுக்குமே அந்தத் தகுதி இருக்கின்றது. ஆனால், ஒரு சில விஷயங்கள் அதற்குத் தடையாக இருப்பதாகக் கருதுகிறேன். அதில் படத்தை வெளியிட வேண்டிய அவசரமே இதற்கு மிகப்பெரிய தடையாக இருக்கின்றது. நான் தென்னிந்திய இயக்குனர்களிடம் நிறைய முறை பேசி இருக்கிறேன். அவர்களைப் பொறுத்தவரை ஒரு படம் லேபிலிருந்து வந்தவுடன் படத்தை வெளியிட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறார்கள். நீண்டகாலமாக ஹிந்திப் படங்களுக்கும் இதே பிரச்சனை இருந்துள்ளது. சமீபத்தில்கூட நான் இயக்குனர் பாலாவிடம் அவரின் ‘பரதேசி’ படத்தை கேன்ஸ் விழாவிற்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொண்டேன். ஆனால், படத்தின் விநியோகஸ்தர்கள் படத்தை விரைவில் வெளியிட வேண்டும் என பாலாவை வற்புறுத்தியதுபோல் தெரிகிறது. இந்தப் பிரச்சனையிலிருந்து அனைத்து இந்திய மொழிப்படங்களும் விரைவில் வெளியே வரும் என்று நம்புகிறன்’’ என்று கூறினார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'காதலை தவிர வேறொன்றும் இல்லை' படம் பாடல் டீஸர்


;